ஷார்ஜாவில் வாணவேடிக்கை காட்டிய குர்பாஸ்! அயர்லாந்தை நொறுக்கி 121 ரன் விளாசல்
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சதம் விளாசினார்.
150 பார்ட்னர்ஷிப்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் (Rahmanullah Gurbaz) மற்றும் இப்ராஹிம் ஜட்ரான் களமிறங்கினர்.
ICYMI: @RGurbaz_21 became the joint-highest centurian for Afghanistan, as he brought up his 6th ODI hundred earlier against Ireland. #AfghanAtalan | #AFGvIRE2024 pic.twitter.com/5TWVgrWFUP
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 7, 2024
இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்த, இவர்களின் பார்ட்னர்ஷிப் 150 ஓட்டங்களை எட்டியது.
6வது சதம்
ஜட்ரான் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தியோ வான் ஒர்கோம் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ஓமர்சாய் 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
ஆனால், அதிரடி ஆட்டத்தைக் காட்டிய குர்பாஸ் 6வது சதத்தினை பதிவு செய்தார். அதன் பின்னர் விஸ்வரூபமெடுத்த குர்பாஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மொத்தம் 117 பந்துகளில் எதிர்கொண்ட அவர், 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் குவித்தார்.
??? ??? ??????? ??? ??????!!! ??@RGurbaz_21 has been on top form in Sharjah as he brings up an excellent hundred against Ireland. This is his 2nd vs Ireland and 6th overall in ODIs, the joint-most (with @MShahzad077) from Afghanistan.??#AFGvIRE2024 pic.twitter.com/BhY5tYXHPo
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |