சிக்ஸர் மழை பொழிந்து 50 பந்தில் முதல் சதம்! வாணவேடிக்கை காட்டிய வீரர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடி சதம் விளாசினார்.
டி20 தொடரின் முதல் போட்டி
ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளும் இடையிலான முதல் டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற அரபு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் குர்பாஸுடன் கைகோர்த்த கேப்டன் இப்ராஹிம் ஜட்ரான் அதிரடியில் மிரட்டினார்.
குர்பாஸ் அதிரடி சதம்
மறுமுனையில் குர்பாஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். இந்த கூட்டணி 137 ஓட்டங்கள் குவித்தது.
ருத்ர தாண்டவம் ஆடிய குர்பாஸ் 50 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது முதல் டி20 சதம் ஆகும்.
HUNDRED! ?@RGurbaz_21 put up an excellent show in Sharjah this evening as he brought up an excellent Hundred against UAE. This is his maiden century in T20Is and third overall from Afghanistan. ??#AfghanAtalan | #UAEvAFG202324 | @EtisalatAf pic.twitter.com/1bmXBL1Pm0
— Afghanistan Cricket Board (@ACBofficials) December 29, 2023
அதனைத் தொடர்ந்து அவர் ஜுனைத் சித்திக் ஓவரில் ஆட்டமிழந்தார். 52 பந்துகளை சந்தித்த குர்பாஸ் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 203 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் ஜட்ரான் 43 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
https://www.cricbuzz.com/live-cricket-scorecard/86840/uae-vs-afg-1st-t20i-afghanistan-tour-of-united-arab-emirates-2023-24 |