இலங்கை பந்துவீச்சை அடித்துநொறுக்கி 210 ரன் இலக்கு நிர்ணயித்த ஆப்கான் அணி
தம்புல்லாவில் நடந்து வரும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், இலங்கை அணி கடைசி டி20 போட்டியில் விளையாடி வருகிறது.
தம்புல்லாவின் Rangiri Dambulla International மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரதுல்லா ஸஸாய் மற்றும் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
இவர்களின் கூட்டணி 7.2 ஓவரில் 88 ஓட்டங்கள் குவித்தது. அப்போது 22 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசியிருந்த ஸஸாய் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் இப்ராஹிம் ஜட்ரான் 10 ஓட்டங்களில் அகில தனஞ்செய ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் குர்பாஸ் சரவெடியாய் அரைசதம் விளாசி, 43 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஓமர்சாய் (31), நபி (16) மற்றும் முகமது இஷாக் (16) ஆகியோரும் அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க, ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை தரப்பில் பத்திரனா, அகில தனஞ்செய தலா 2 விக்கெட்டுகளும், ஹசரங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Afghanistan finish at 209/5!
— Afghanistan Cricket Board (@ACBofficials) February 21, 2024
Excellent contributions from @RGurbaz_21 (70), @zazai_3 (45), @AzmatOmarzay (31), Mohammad Ishaq (16*) and @MohammadNabi007 (16*) powered #AfghanAtalan to 209/5 runs in the 1st inning. ?
Over to our bowlers now. ?#SLvAFG2024 pic.twitter.com/1dfwnUIRXr
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |