பாகிஸ்தானுக்கு திருப்பி கொடுத்த ஆப்கான் வீரர்! இலங்கையில் மிரட்டல் சதம் விளாசல்
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சதம் விளாசினார்.
முதல் போட்டியில் படுதோல்வி
இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 59 ஓட்டங்களில் சுருண்டு, 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் ஹம்பன்டோடா மைதானத்தில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது.
Incredible scenes in Hambantota as @RGurbaz_21 brought up his 5th ODI century, his 1st against Pakistan. ??#AfghanAtalan | #AFGvPAK | #SuperColaCup | #ByaMaidanGato pic.twitter.com/QwCENktlq3
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 24, 2023
சிம்மசொப்பனமாக விளங்கும் குர்பாஸ்
நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ரஹ்மனுல்லா குர்பாஸ், இஃப்ராஹிம் ஜட்ரான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Twitter (ACBofficials)
இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு தண்ணி காட்டினார். சிக்ஸர், பவுண்டரி என விளாசிய இந்தக் கூட்டணி 36வது ஓவரில் 200 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டியது.
குர்பாஸ் 122 பந்துகளில் 5வது சதத்தினை விளாசினார். பாகிஸ்தானுக்கு எதிராக இது முதல் சதம் ஆகும். அதேபோல் இஃப்ராஹிம் 3வது அரைசதம் அடித்தார்.
The moment when @IZadran18 brought his 3rd ODI half-century ?#AfghanAtalan | #AFGvPAK | #SuperColaCup | #ByaMaidanGato pic.twitter.com/AvLpor3vAG
— Afghanistan Cricket Board (@ACBofficials) August 24, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |