2021 குரு பெயர்ச்சி நன்மைகளை அடையப்போகும் ராசிக்காரர் யார்?
குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. பொதுவாக குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
சாதகமற்ற பலன் பெறும் ராசிகள் யார்?
- 2021ல் கும்ப ராசியில் ஏற்படக்கூடிய குரு பெயர்ச்சி ஆவதால் ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு சாதகமற்ற பலன்கள் உண்டாகும்.
- அதுமட்டுமல்லாமல் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்,
- உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இருப்பவர்கள் குரு பகவானுக்கு உரிய பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதோடு, குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானை வழிபட்டு வர, அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.
நன்மை அடையும் ராசிகள்
குரு பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நிகழப்போகிறது. குரு அமருவதைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை அடையப்போகிறார்கள்.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்
குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.