முடிந்தளவு இந்த உணவுகளை சாப்பிட வேணாம்! தொடர்ந்து சாப்பிட்டால் குடல் முழுசா பாதிச்சிடும்
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் குடல் முதன்மையானது. நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்கள் வரை உறிஞ்ச குடல் தான் உதவுகிறது.
குடலுக்கு நன்மைகள் செய்யும் உணவுகள் மற்றும் தீமைகள் செய்யும் விடயங்கள் குறித்து பார்ப்போம்.
அதிக சர்க்கரை
சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பொருட்கள் குடலுக்கு எதிரியாகும். அதிகளவு சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோய், உடல் பருமன், பெருங்குடல் தொற்று என பல நிலைகளுக்கு வழி வகுக்கும். மேலும் சர்க்கரையில் ஊட்டச்சத்து என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது. கலோரியின் அளவும் அதிகம் என்பதால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் உங்க குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகள், காரசாரமான, அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் போன்றவை பெருங்குடல் ஆரோக்கியத்திற்கு மோசமானவை. இந்த உணவுகள் உங்க வயிற்றுக்கும் குடலுக்கும் நல்லது அல்ல.
காபைன்
ஒரு நாளைக்கு ஒரு காபி குடிப்பது பிரச்சனை அல்ல. அதுவே ஒரு நாளைக்கு 4 கப் வரை குடித்தாலோ அல்லது காபிக்கு அடிமையாக இருந்தாலோ பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது. காஃபைன் மற்றும் ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது உங்க வயிற்றுப்புற பகுதியை எரிச்சலடைய செய்து விடும். இதனால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகி நெஞ்செரிச்சல், உணவை விழுங்க முடியாத நிலை, குடல் புண்கள், அல்சர் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
பீன்ஸ்
காய்கறிகளில் பீன்ஸ் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று. பீன்ஸில் நார்ச்சத்துகள், வைட்டமின் பி, ஈ புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் ப்ளோனாய்டுகள் போன்ற சேர்மங்கள் பெருங்குடல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
பப்பாளி
பப்பாளி பழம் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை விரட்ட உதவி செய்யும். பப்பாளியில் சிறப்பு மசகு எண்ணெய் மற்றும் என்சைம்கள் உள்ளன. அவை உங்க பெருங்குடலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க உதவு செய்கிறது.