டோனியா இருந்தா இப்படி செய்திருக்கமாட்டார்! கோலியின் தவறை தைரியமாக சுட்டி காட்டிய காம்பீர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான காம்பீர், உலகக்கோப்பை டி20 போட்டியில் கோலி செய்யும் தவறு என்ன என்பதை தைரியமாக சுட்டிக் காட்டியுள்ளார். '
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 போட்டிகளில், கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து நிற்கிறது.
இருப்பினும் ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் முடிவை வைத்து, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இது குறித்து காம்பீர் தற்போது கூறுகையில், கோலி எப்போதுமே களத்தில் சரியான வியூகங்களை கட்டமைத்து நான் பார்த்ததே கிடையாது.
இந்த முறையும் அதே தவறை செய்துள்ளார். அவர் வகுத்த வியூகங்கள் எதுவும் அணிக்கு பலன் கொடுக்கவில்லை. ஆனால் டோனி அப்படி செய்ய மாட்டார் நான் அவரின் கீழ் விளையாடி உள்ளேன் எனக்கு தெரியும். அடிக்கடி டோனி அணியை இப்படி மாற்ற மாட்டார்.
அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் கூட பெரிய அளவில் வியூகங்களை வகுக்க மாட்டார். ஆனால், கோலி போன்ற ஒரு கேப்டன் ஒரே போட்டியில் எப்படி இத்தனை மாற்றங்களை செய்யலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். ரோகித்சர்மா 3-வது வீரராகவும், சூர்யகுமார் யாதவ் நிறுத்தப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.