பிலிப்ஸ், ஹோப், ஹெட்மையர் சொதப்பல்..99 ஓட்டங்களுக்கு சுருண்டு கயானா தோல்வி
Barbados tridents beat guyana amazon warriors by 6 wickets: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸை வீழ்த்தியது.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுருண்ட கயானா அமேசான் வாரியர்ஸ்
2026 CPL 35வது போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதின.
Making an instant impression! 🔥
— CPL T20 (@CPL) September 13, 2026
George Linde comes on and delivers two Flow Classic Catches in the over! 🇧🇧 x 🇬🇾#CPL26 #BTvGAW #CricketPlayedLouder #BiggestPartyInSport #Flow pic.twitter.com/qw0V4zyyW9
முதலில் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 24 ஓட்டங்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
கஸன்பர் மற்றும் லேய்ன் தலா 3 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளும், ரூதர்போர்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் வெற்றி
பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் (14.5 ஓவர்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
பிரண்டன் கிங் (Brandon King) ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், சட்ராக் டெஸ்கார்ட் 32 (20) ஓட்டங்களும் எடுத்தனர்.
மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளும், வீராசாமி பெருமாள் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |