பிலிப்ஸ், ஹெட்மையரின் அதிரடி..கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி
Guyana amazon warriors beat saint lucia by 7 wkts: செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி பெற்றது.
டேர்ரன் சேமி மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.
டிவைன் பிரிட்டோரியஸ் அபார பந்துவீச்சு
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதிய கரீபியன் பிரீமியர் லீக் போட்டி டேர்ரன் சேமி தேசிய மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. சரித் அசலங்கா 35 (28) ஓட்டங்கள் எடுத்தார். டிவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் க்ளென் பிலிப்ஸ் 36 (26) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ஹெட்மையர் சரவெடி
நிதானமாக ஓட்டங்களை சேர்த்த மவேன்ரா தின்ட்யால் 50 (51) ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்தார்.
அடுத்து வந்த ஷாய் ஹோப் 17 ஓட்டங்களில் வெளியேறினார். ஷிம்ரோன் ஹெட்மையர் சரவெடி ஆட்டம் ஆடி, 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் கயானா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |