86 ஓட்டங்கள் இலக்கு வைத்து வெற்றி! 47 வயதில் கிண்ணத்தை வென்ற இம்ரான் தாஹிர்
குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.
85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கயானா அணி 18.5 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்யூ போர்டே (Matthew Forde) 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.
பீட்டர் சிடில், அனிருத் இமானுவல் தலா 3 விக்கெட்டுகளும், ஃபேபியன் ஆலன், கல்லம் மற்றும் கரிமா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கயானா அமேசான் வாரியர்ஸ் சாம்பியன்
பின்னர் ஆடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஓலிவர் பீக் (Oliver Peake) ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.
டிவைன் பிரிட்டோரியஸ், மொஹம்மது நபி தலா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
47 வயதான இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை வென்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |