தாய் இறந்து விட்டதாக கூறி ஜி.வி.பிரகாஷிடம் பண மோசடி - வெளியான ஆதாரம்
தாய் இறந்து விட்டதாக கூறி, ஜி.வி.பிரகாஷிடம் ரூ.20,000 பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷிடம் பண மோசடி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக செயல்படும் இவர், அவ்வப்போது யாரவது உதவி என கேட்டால், மனித நேய அடிப்படையில் தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவார்.
எக்ஸ் தளத்தில், இறந்த பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், சிறு வயதிலே அப்பா இறந்து விட்டார். தற்போது என் தாயும் இறந்து விட்டார். இறுதி சடங்கு கூட செய்ய பணம் இல்லாமல் நானும் எனது தங்கையும் தவிக்கிறோம் எனக்கூறி ஜி.வி.பிரகாஷிடம் உதவி கோரி இருந்தார்.
நானும் தங்கச்சியும் என்ன பண்ணுவது தெரியமால் உல்லோம் எங்களுக்கு இறுதி சடங்கு பண்ணுவதாருக்கு உதவி பண்ணுங்க அண்ணா @gvprakash 🙏🏻🥲 https://t.co/iXJWnwQpR6
— Mom Little King.♥️ (@prasannasathis) December 25, 2025
இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் Gpay ரூ.20,000 வழங்கி அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதன் பின்னர் பலரும் அந்த நபருக்கு தங்களால் முடிந்த பணத்தை அனுப்பியுள்ளனர்.
— G.V.Prakash Kumar (@gvprakash) December 25, 2025
ஆனால், தாய் இறந்து விட்டதாக உதவி கோரி வெளியான பதிவு, 3 ஆண்டுகளுக்கு முன்னரே சமூகவலைத்தளங்கள் மற்றும் யூடியூப்பில் உள்ளதாக ஆதாரங்கள் வெளியானது.
This photo is fake @gvprakash anna😭 https://t.co/S9Q6F7BYlr pic.twitter.com/8vcGtj1Xc7
— Jay Fc | 厘米维杰 (@i_jay_fc) December 25, 2025
இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நெட்டிசன்கள், இவ்வாறு மனித நேயத்தை பயன்படுத்தி ஏமாற்றுவதன் மூலம், உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காத நிலை ஏற்படும் என கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |