திரையரங்கில் நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதி மறுப்பு: பிரபல இசையமைப்பாளர் கண்டனம்
சென்னை ரோகிணி திரையரங்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்த நரிக்குறவர்களை அனுமதிக்காமல் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதிற்கு எதிராக இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நரிக் குறவர்கள் அனுமதி மறுப்பு
சென்னை ரோகிணி திரையரங்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்த நரிக்குறவர்களை அனுமதிக்காமல் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதற்கு எதிராக நடிகர் ஜீவி பிரகாஷ் குமார்(g.v prakash kumar) தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
@twitter
நடிகர் சிம்பு நடித்து இன்று வெளியான பத்து தல படத்திற்கு ரசிகர் மன்றம் சார்பாக சில டிக்கெட்டுகள் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காலை முதல் காட்சிக்கு ரோகிணி திரையறங்கிற்கு படம் பார்க்க இரு நரிகுறவ பெண்மணிகள் தங்களது குழந்தைகளோடு சென்றுள்ளனர்.
ஊழியர் கேட்கவில்லை
அப்போது நுழைவு வாயிலில் நின்றிருந்த ஊழியர் அவர்களை படம் பார்க்க உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். அவர்கள் கையில் டிக்கெட் இருந்தும் அந்த ஊழியர் அவர்களை ஏளனமாக நடத்தியுள்ளார்.
@twitter
இதனை தொடர்ந்து அதனை கவனித்துக்கு கொண்டிருந்த நபர் அந்த ஊழியரிடம் இவர்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.
இவர்களை அனுமதிக்க முடியாது என அந்த ஊழியர் கூறியதை அந்த நபர் தனது போனில் வீடியோ பிடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
@twitter
இந்த நிலையில் திரையரங்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்த நரிக்குறவர்களை அனுமதிக்காமல் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்ட ஊழியர் மீதும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க தருமபுரி எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜீ.வி பிரகாஷ் கண்டனம்
இந்த விடயம் பூதாகரமாக வெடித்ததால் அந்த திரையரங்க நிர்வாகம் மீண்டும் சில நரிக்குறவர்களை திரையரங்கத்தில் படம் பார்க்க அனுமதித்துள்ளது.
— Rohini SilverScreens (@RohiniSilverScr) March 30, 2023
அவர்கள் திரையரங்கில் அமர்ந்து படம் பார்ப்பதை வீடியோ எடுத்து ரோகிணி திரையிரங்க நிர்வாகம் தங்களது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதனை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் குமார்
”அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. https://t.co/IjGBzxLkJT
— G.V.Prakash Kumar (@gvprakash) March 30, 2023
கலை எல்லா மக்களுக்கும் பொதுவானது என்றும், இவ்வளவு வெளிப்படையாக தீண்டாமை கொடுமையில் ஈடுபடும் ரோகிணி திரையரங்க நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.