செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருக்கிறாரா? ஹெச்.ராஜா
செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் தான் இருக்கிறாரா? என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் டுவிட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்த நிலையில், இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள செந்தில்பாலாஜி, நேற்று காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி இருக்கிறாரா? அவ்வாறு இருந்தால் காவேரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது.
தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?
இந்த ட்வீட் பார்த்து பல உ பிஸ் எக்காளமிட்டு இவர்கள் வீரத்தை காகிதத்தில் காட்டுகின்றனர். இந்த அட்டை கத்திகள்.
திமுக வின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மணையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?
— H Raja (@HRajaBJP) July 12, 2023
1975-77 நெருக்கடி நிலை சமயத்தில் கரைவேட்டி கட்ட தைரியமற்ற கோழைகள். 1976 ஜனவரி 30-ல் இன்றைய முதல்வரின் தந்தை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது திமுகவினரால் என்ன செய்ய முடிந்தது’’ என பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |