உண்மையை சொல்ல தைரியம் இல்லை., விஜய்யின் ஜனநாயகன் தாமதம் குறித்து ஹெச்.வினோத் விளக்கம்
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு நீண்ட காலமாக தாமதமடைந்து வருகிறது.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் நிலைமை குறித்து இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் தனது மௌனத்தை உடைத்துள்ளார்.
அவர், "அதிலிருக்கும் உண்மையை எல்லாம் வெளிப்படையாக சொல்லும் தைரியம் எனக்கு இல்லை" என்று கூறியுள்ளார். அதனால், அப்படம் வரும்போது பார்க்கலாம் என கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகம். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. படம் தாமதமாகினாலும், தரத்தில் எந்தவித குறையும் இருக்காது என்று வினோத் உறுதியளித்துள்ளார்.
— Video BackUp (@VideoBack09) May 30, 2026
இந்த படம், விஜய்யின் அரசியல் பயணத்துடன் தொடர்புடையதாகவும், சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் ஆர்வம் உருவாகியுள்ளது.
ரசிகர்கள், ஜனநாயகன் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |