லண்டன் நகர மக்களை உலுக்கிய சம்பவம்... குழந்தை உட்பட நால்வர் மோசமான நிலையில்
வடகிழக்கு லண்டனின் Dalston பகுதியில் உணவகத்தின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை ஆபத்தான நிலையில்
இதில் மேலும் மூன்று பெரியவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 9.20 மணிக்கு சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் சம்பவயிடத்தில் வரவழைக்கப்பட்டுள்ளது. பொலிசார் வெளியிட்ட தகவலில், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று பெரியவர்களும் ஒரு குழந்தையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக கிழக்கு லண்டனில் ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். காயமடைந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், எஞ்சிய மூவரின் நிலை தொடர்பில் தகவலுக்காக காத்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஒருவர் எவின் உணவகத்தின் திசையை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |