தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... லண்டனில் 9 வயது சிறுமி குறித்து வெளிவரும் புதிய தகவல்

London Crime Indian Origin
By Arbin Jun 02, 2024 03:16 AM GMT
Report

லண்டனில் Hackney பகுதியில் உணவகம் ஒன்றின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து லண்டன்

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அந்த குடும்பம் கடந்த புதன்கிழமை துருக்கிய உணவகத்தில் உணவருந்தி வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அந்த உணவகம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான்.

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... லண்டனில் 9 வயது சிறுமி குறித்து வெளிவரும் புதிய தகவல் | Hackney Shooting Girl Fighting For Life

இதில் குறித்த சிறுமியுடன், அடையாளம் தெரியாத மூவரும் காயங்களுடன் தப்பினர். ஆனால் மரியா என்ற அந்த 9 வயது சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ள நிலையில், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

தமது உறவினர்களை சந்திக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து லண்டன் வந்திருந்த சிறுமி தற்போது தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதன்கிழமை முதல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் நம்பிக்கை அளித்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... லண்டனில் 9 வயது சிறுமி குறித்து வெளிவரும் புதிய தகவல் | Hackney Shooting Girl Fighting For Life

மட்டுமின்றி, சிறுமியின் தந்தை பேசியதாகவும், அதற்கு சிறுமி பதிலளித்துள்ளதாகவும், தந்தையின் விரல்களை பற்றிக்கொண்டதாகவும் அந்த உறவினர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்தாரியின் இலக்காக இருக்கலாம்

தலையில் இருந்து தோட்டாவை அகற்றவில்லை என்றும், ஆனால் இன்னொரு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் தயாராகி வருவதாகவும், அப்போது தோட்டாவை அகற்றுவார்கள் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி மரியா புதன்கிழமை இரவு 9 மணியளவில் Evin உணவகத்தில் வைத்து துப்பாக்கி குண்டுக்கு இலக்கானார். தாக்குதலை முன்னெடுத்த நபர் Ducati Monster மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த உணவகத்தின் வெளியே காத்திருந்த மூவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு... லண்டனில் 9 வயது சிறுமி குறித்து வெளிவரும் புதிய தகவல் | Hackney Shooting Girl Fighting For Life

அந்த மூவரும் தாக்குதல்தாரியின் இலக்காக இருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். அந்த மூவருக்கும் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மூவர் மீது நடத்திய தாக்குதலில், உணவகத்தின் உள்ளே இருந்த சிறுமியின் தலையில் துரதிர்ஷ்டவசமாக குண்டு பாய்ந்துள்ளது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய சிறுமி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: உறவினர்கள் கவலை

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய சிறுமி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: உறவினர்கள் கவலை

தற்போது லண்டனில் குடியிருக்கும் துருக்கிய மற்றும் குர்து சமூக மக்களிடம் இந்த விவகாரம் தொடர்பில் உதவ முன்வர வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US