மூன்று முறை கருச்சிதைவு... அடுத்து பிறந்த குழந்தை மரணம்: ரொனால்டோ தம்பதி வெளியிட்ட நொறுங்கவைக்கும் தகவல்
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதியின் மகள் பெல்லா எஸ்மரால்டா பிறந்து ஓராண்டான நிலையில், தாம் கடந்த நெருக்கடிகளை பகிர்ந்துள்ளார் ஜார்ஜினா.
மூன்று முறை கருச்சிதைவு
ஸ்பெயின் சமூக ஊடக பிரபலமான 29 வயது ஜார்ஜினா, தமக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து திரும்பும் இரவுகளில் கெட்ட கனவுகளால் அவதிப்பட்டேன் என தெரிவித்துள்ளார் ஜார்ஜினா.
குழந்தை சரியான நிலையில் இருக்கிறாதா, சாதாரணமாக மகப்பேறு நடக்குமா அல்லது அறுவை சிகிச்சை செய்யும் நிலை வருமா என ஆயிரம் கேள்விகள் தம்மை துரத்தியதாக அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மூன்று முறை கருச்சிதைவை எதிர்கொண்டதால் ஒவ்வொரு அல்ட்ராசவுண்ட் சோதனையின் போதும் பயம் தொற்றிக்கொள்ளும் என்ற அவர், உடைந்து கொறுங்கிய நிலையிலேயே குடியிருப்புக்கு திரும்புவேன் என்றார்.
@netflix
மகன் ஏஞ்சல்
இந்த நிலையில் இரட்டை குழந்தை என்பது உறுதி செய்யப்பட்டு, 2022 ஏப்ரல் மாதம் ஜார்ஜினா இரு பிள்ளைகளை பெற்றெடுத்தார். அதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அன்றைய நாளே ரொனால்டோ- ஜார்ஜினா தம்பதி, தங்களின் மகன் ஏஞ்சல் இறந்ததை சமூக ஊடகத்தில் தெரியப்படுத்தி, அஞ்சலியும் செலுத்தினர்.
ரொனால்டோவுக்கு குழந்தை பெல்லா உட்பட, மூன்று வயதில் அலனா என்ற மகளும், 12 வயதில் கிறிஸ்டியானோ என்ற மகனும் உள்ளனர். இளம் கிறிஸ்டியானோவின் தாயார் யார் என்பதை ரொனால்டோ இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளார்.
இவர்களுடன், அமெரிக்க வாடகைத் தாயார் மூலமாக பெற்றெடுத்த இரட்டையர்களான 4 வயது ஈவா மற்றும் மேடியோ என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.