வாட்ஸ்அப் சேட்டால் கடுமையாக தண்டிக்கப்பட்ட சுவிஸ் இளைஞர்
சுவிட்சர்லாந்தில் 14 வயது சிறுவனுடன் வாட்ஸ்அப் சேட்டில் ஆபாசமாக பேசிய இளைஞருக்கு மாவட்ட நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Schwyz மாவட்டத்தை சேர்ந்த, தற்போது 27 வயதாகும் இளைஞருக்கே நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2019 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், தற்போது 27 வயதாகும் இளைஞர் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான, அப்போது 14 வயது சிறுவனுடன் மிக ஆபாசமாக வாட்ஸ்அப் சேட் செய்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான மொத்தம் 400 சேட் தகவல்களில் 8ல் மட்டுமே முகம் சுழிக்கும் வகையில் இருவரும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அருவருக்கத்தக்க படங்களையோ காணொளியையோ இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சிறார் துஸ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளைஞருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிழை விதித்துள்ளதுடன், தினசரி 120 பிராங்குகள் என 50 நாட்களுக்கு பிழை விதித்துள்ளதுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1500 பிராங்குகளின் நினைவூட்டல் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் இளைஞர் சார்பாக வாதிட்ட சட்டத்தரணிகள், இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளாமலும், காணொளிகள் ஏதும் பகிர்ந்து கொள்ளாத நிலையில், எவ்வாறு குற்றமாகும் என கேள்வி எழுப்பியுள்ளதுடன், இளைஞரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், தாம் எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை எனவும், ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே அவ்வாறு ஆபாசமாக சேட் செய்ததாகவும் நீதிமன்றத்தில் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், Schwyz மாவட்ட நீதிமன்றம் அரசு தரப்பு வாதங்களை கருத்தில் கொண்டு, குறித்த இளைஞருக்கு 100 நாட்களுக்கு தலா 120 பிராங்குகள் அபராதமாக விதித்ததுடன், நினைவூட்டல் அபராதமாக 3,000 பிராங்குகளும் விதித்துள்ளது.
மட்டுமின்றி, குறித்த இளைஞர் வாழ்நாளில் சிறார்களுடன் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த இளைஞருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை மிக மிக அதிகம் எனவும், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கும் கொடூரர்களுக்கு விதிக்கும் தண்டனையைவிடவும் அதிகம் என சமூக ஊடகங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.