லண்டனில் பிடிப்பட்டார் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது: 2 நாளுக்கு பிறகு தேடுதல் வேட்டை நிறைவு
தவறுதலாக விடுவிக்கப்பட்ட தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது(Hadush Kebatu) லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்
செக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக புகலிட கோரிக்கையாளரான எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 41 வயது ஹதுஷ் கேபது(Hadush Kebatu) தவறுதலாக விடுதலை செய்யப்பட்டது பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஹதுஷ் கேபது-வை பிடிக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸார், போக்குவரத்து காவல்துறை மற்றும் எசெக்ஸ் பொலிஸார் என பல துறைகள் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
மேலும் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது டைசியாக ஹாக்னி(Hackney) பகுதியில் பார்க்கப்படுவதற்கு சற்று முன்னதாக டால்ஸ்டன்(Dalston) பகுதியில் உள்ள நூலகம் ஒன்றில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சிகளை பொலிஸார் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
மீண்டும் பிடிபட்ட ஹதுஷ் கேபது
இந்நிலையில் இரண்டு நாள் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹதுஷ் கேபது ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில் லண்டன் ஃபின்ஸ்பரி பூங்கா(Finsbury Park) அருகில் வைத்து மெட்ரோபொலிட்டன் பொலிஸார் ஹதுஷ் கேபதுவை மீண்டும் கைது செய்துள்ளனர்.

ஹதுஷ் கேபது-வின் கைது பொதுமக்களின் ஆதரவு மற்றும் விரைவான நடவடிக்கை காரணமாக நிகழ்ந்து இருப்பதாக காவல்துறை தளபதி ஜேம்ஸ் கான்வே பாராட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் நீதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டேவிட் லாம்மி, கைது செய்யப்பட்டுள்ள தண்டனை குற்றவாளியான புகலிடக் கோரிக்கையாளர் ஹதுஷ் கேபது விரைவில் நாடு கடத்தப்படுவார் என உறுதியளித்துள்ளார்.
ஹதுஷ் கேபது வெள்ளிக்கிழமை HMP Chelmsford சிறையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டதை அடுத்து இரண்டு தினங்களாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |