பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட கைதி: வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்
தவறுதலாக விடுவிக்கப்பட்டதை ஹதுஷ் கேபது(Hadush Kebatu) தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தண்டனை கைதியை தேடும் பணி தீவிரம்
எசெக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக புகலிட கோரிக்கையாளரான எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 41 வயது ஹதுஷ் கேபது(Hadush Kebatu) தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஹதுஷ் கேபது வெள்ளிக்கிழமை தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலின் படி, 12 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான ஹதுஷ் கேபது நாடு கடத்தப்படுவதற்காக HMP Chelmsford சிறையில் இருந்து குடியேற்ற தடுப்பு காவலுக்கு மாற்றப்பட இருந்தார். இந்நிலையில், நிர்வாக பிழை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட புதிய சிசிடிவி காட்சிகள்
தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது(Hadush Kebatu) டால்ஸ்டன்(Dalston) பகுதியில் உள்ள நூலகம் ஒன்றில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தேடப்பட்டு வரும் ஹதுஷ் கேபது கடைசியாக ஹாக்னி(Hackney) பகுதியில் பார்க்கப்படுவதற்கு சற்று முன்னதாக இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஹதுஷ் கேபது இன்னும் சிறையில் வழங்கப்படும் சாம்பல் நிற கால்சட்டையை அணிந்து இருப்பதாகவும், அவகேடோ பழம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற பையை தற்போது உடன் வைத்திருப்பதாகவும் பொலிஸார் அடையாளம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹதுஷ் கேபதுவை யாரும் அருகில் நெருங்க வேண்டாம் என்றும், அவர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக 999 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |