அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள் விளாசி வெற்றி! 18 பந்தில் 48 ஓட்டங்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்
டாக்காவில் நடந்த BPL போட்டியில் ராங்பூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிட்டகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
வங்காளதேச பிரீமியர் லீக் தொடரின் 37வது போட்டியில் ராங்பூர் ரைடர்ஸ் (Rangpur Riders) மற்றும் சிட்டாகாங் கிங்ஸ் (Chittagong Kings) அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராங்பூர் அணி 5 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. இஃப்திகார் அகமது (Iftikhar Ahmed) ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
Talk about finishing it off in style! 😎
— FanCode (@FanCode) January 29, 2025
Haider Ali smacked 4 consecutive sixes to guide Chittagong Kings to 3rd place on the #BPL table!#BPLonFanCode pic.twitter.com/tvjKaABLKZ
அடுத்து களமிறங்கிய சிட்டகாங் அணியில் பர்வேஸ் ஹொசைன் இமான் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஷமிம் ஹொசைன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணியின் வெற்றிக்கு 23 பந்துகளில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இருந்த ஹைதர் அலி (பாகிஸ்தான்) 18வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாச, சிட்டகாங் அணி 17.4 ஓவரிலேயே 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹைதர் அலி (Haider Ali) 18 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 48 ஓட்டங்கள் குவித்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |