கனேடிய மாகாணம் ஒன்றில் 70 வாகனங்களை நாசம் செய்த ஆலங்கட்டி மழை...
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் பெய்த ஆலங்கட்டி மழையின்போது, ஆரஞ்சுப் பழம் அளவில் விழுந்த பனிக்கட்டிகளால் கிட்டத்தட்ட 70 வாகனங்கள் சேதமடைந்தன.
ஆல்பர்ட்டா மாகாணத்தின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இடி மின்னல் எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், அதற்கு முன் இந்த ஆலங்கட்டி மழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
ஆனால், ஆலங்கட்டி மழையால் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆல்பர்ட்டாவை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுழல்காற்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவையும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
Major car damage from the earlier #abstorm. Talked to the owners of the vehicle and they said they got stuck in the core NW of Innisfail pic.twitter.com/itXqs544bK
— Jay Lesyk (@JayLesykWX) August 2, 2022
Image - cbc