நரை முடிக்கு உருளைக்கிழங்கு! இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. விரைவில் பலன் கிடைக்கும்
பொதுவாக இன்றைய காலத்தில் முடியைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகி வருகிறது.
சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற பிரச்சினைகளில் முடி பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக இன்றைய கால பருவ வயதில் உள்ள அனைவருக்குமே நரைமுடி பிரச்சினை முக்கிய இடத்தில் உள்ளது.
இதனை போக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க சிறந்த வழி.
இது எந்த பக்கவிளைவையும் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நேர்மறையான முடிவுகளை அளிக்கிறது. அந்தவகையி்ல தற்போது நரைமுடியை போக்க சில எளியவழிகளை இங்கே பார்ப்போம்.
- 50 மில்லி உருளைக்கிழங்கு சாறு 10 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 5 மில்லி ஆலிவ் எண்ணெய் கலந்து கலவையை உருவாக்க வேண்டும். இந்த சாற்றை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்களுக்கு உங்கள் தலையை சூடான துண்டுடன் போர்த்தி விடுங்கள். பின்னர், முடியை ஷாம்பு கொண்டு அலசுங்கள்.
- 50 மில்லி உருளைக்கிழங்கு சாற்றில், 9 மில்லி கற்றாழை ஜெல் சேர்க்கவும். பொருட்களைக் கலந்து, உச்சந்தலையில் இருந்து நுனிகள் வரை எண்ணெய் போல உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முடியை அலச வேண்டும்.
- நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்னர், உருளைக்கிழங்கை நன்றாக அரைக்கவும். ஈரமான துணியைப் பயன்படுத்தி, அரைத்த உருளைக்கிழங்கிலிருந்து சாற்றை பிழியவும். ஒரு கொள்கலனில், அந்த சாற்றை சேகரிக்கவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியின் நீளத்திற்கு தடவுவதற்கு ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தவும். சிறிது நேரம் கழித்து உங்கள் முடியை அலசினால், நல்ல பலனை பெறுவீர்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.