ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் 5 உணவுகள்.., அடிக்கடி சாப்பிடுங்கள்
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நன்மை கிடைக்கும்.

என்னென்ன உணவுகள்?
முட்டை- புரதம், பயோட்டின் நிறைந்தது. முடி வேர்களை வலுப்படுத்தி, உடைதலைக் குறைத்து, அடர்த்தியான வளர்ச்சிக்கு உதவும்.
கீரை- வைட்டமின் A, C மற்றும் இரும்புச் சத்து உள்ளது. முடி உதிர்வை குறைத்து, தலைச்சரும ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு- பீட்டா-கரோட்டின் நிறைந்தது. முடி வளர்ச்சியை தூண்டி, வறட்சியை குறைக்கும்.
தயிர்- புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகை கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காய்- வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. முடி உதிர்வைத் தடுத்து, முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |