முடி உதிர்வு அதிகமா இருக்கா; அப்போ இதை மட்டும் செய்து பாருங்க
ஒருமுறை முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், முடி உதிர்வதை கட்டுப்படுத்துவது கடினம். பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதற்கு உணவுமுறை, மரபு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
தலை முடி உதிர்வதற்கான காரணம்
- மரபணுப் பிரச்சனை
-
குழந்தை பிறப்பு
- அழற்சி
- ஹார்மோன் சமநிலையின்மை
- தைராய்டு
- ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு
- இன்சுலின் எதிர்ப்பு
- நாள்பட்ட சிதைவு நோய்
- மனச்சோர்வு
- செரிமான பிரச்சனைகள்
- வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு
- அறுவைசிகிச்சை
இதற்கு ஒரு முறையாக தான் தலைகீழாக முடி கழுவுதல் முறை பயன்படுத்த வேண்டும்.
தலைகீழாக முடி கழுவுதல் என்பது வழக்கமாக முடி கழுவும் முறையை மாற்றியமைக்கிறது.
இதை பயன்படுத்துவதால் முடிக்கொட்டுதல் பிரச்சினை நீங்கி விடும். மேலும் இவ்வாறு செய்வதால் தலையில் உள்ள எண்ணெய் நீங்கி முடி ஒழுங்காக இருக்கும். முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆகவே இந்த முறையை பயன்படுத்துவது சிறந்த ஒன்றாகும்.
எவ்வாறு இதை செய்ய வேண்டும்?
முதலில் தலை முடியை ஈரமாக கழுவிக்கொள்ள வேண்டும். பின் ஷாம்புக்கு பதிலாக தலைமுடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். பின் அதை மசாஜ் செய்து, ஒரு 20 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும்.
போட்டு வைத்த கண்டிஷனரை அகற்றாமல் அதனுடன் ஷாம்பூவை போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இது தான் தலைகீழாக முடி கழுவுதல் எனக் கூறப்படும்.
இவ்வாறு செய்து வந்தால் தலை முடியும் உதிராமல் மென்மையாகவம் வளர்ச்சியடையும் என்பது குறிப்படத்தக்கது.
இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.