முகம் பட்டுப்போல மிளிர, தலைமுடி செழித்து வளர சாப்பிட வேண்டிய உணவுகள்!
உணவே மருந்து என்று சொல்வார்கள். சத்தான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக நோய், நொடி இல்லாமல் வாழலாம்.
எந்த அளவுக்கு நீங்கள் காய்கறிகள், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் முகம் பட்டுப்போல் மிளிரும். முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சரி... எந்தெந்த உணவுகள் நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய முகமும், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம் -
மீன்கள்
மீனில் அதிகளவில் ஒமேகா 3 உள்ளது. இந்த ஒமேகா 3 அமிலம் தலைமுடியை செழித்து வர செய்யும். மேலும், தோல் சிவந்துபோதல், தோல் வீக்கம் ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் நிறைந்து காணப்படுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கும், முக ஆரோக்கியத்திற்கும் உதவி செய்யும்.
நட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்பு, சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இவற்றை நாம் தினமும் எடுத்துக் கொண்டோமானால் தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு விடலாம்.
அவோகேடா
தினமும் அவோகேடா சாப்பிட்டு வந்தோமானால், அதில் உள்ள சிட்ட வைட்டமின் சி, ஏ, இ உடலில் உள்ள தோலை பராமரிக்கும். மேலும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
முட்டை
தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், முட்டையில் உள்ள புரதச் சத்து தலைமுடியை பராமரிக்கும். செழித்து வளர செய்யும்.
கீரைகள்
கீரைகளை தினமும் நாம் உணவில் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கொடுக்கும். அதில் உள்ள ஊட்டச்சத்து நம் முடி, தோல், நகங்களை பராமரிக்கும்.
நீர்ச்சத்து
தினமும் வெள்ளரி, தர்பூசணி, ஆப்பிள், தக்காளி , பாகற்காய், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தலைமுடி செழித்து வளர வைக்கவும் உதவி செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |