தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வைக்கும் 5 சூப்பர் உணவுகள்
பெரும்பாலும் அனைவருக்குமே தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையே முடி தொடர்பானதாக மட்டுமே இருக்கிறது, இதற்காக கண்ட கண்ட செயற்கை ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை விட உங்களது உணவில் மாற்றத்தை கொண்டு வருவது சிறந்தது.
இந்த பதிவில் தலைமுடியை சீராக வளர வைக்கும் 5 உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டை
தேகம் வலுவலுப்பு பெற பலரும் பரிந்துரைக்கப்பட்ட உணவு முட்டை ஏனெனில் முட்டையில் புரதச்சத்தும், வைட்டமின் டி யும் நிறைந்திருக்கின்றன, இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுசேர்க்கும்.
எனவே தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
முட்டையிலுள்ள நல்ல கொழுப்புகள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.மேலும் புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஜினேற்ற பண்புகள் அதிகமாக உள்ளது.
முருங்கைக்கீரையை அதிகம் உணவில் எடுத்துக்கொள்வதால் பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
முருங்கை கீரையை சூப் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நீங்கும் முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மை அகற்றும்.
முருங்கை இலையில், மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்தது. இது முடி உதிர்வை குறைக்கும், நரைமுடி வராமல் பாதுகாக்கும்.
3 முதல் 4 கறிவேப்பிலை இலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று வர, முடி நன்றாக வளரும்.
மேலும் தலைமுடி நிறம் மட்டுப் போவதையும், பொலிவு குறைவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது.
அதுமட்டுமின்றி உடலில் ரத்த சோகையை அண்ட விடாமலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை , சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
நெல்லிக்காய்
முடி வளர்ச்சிக்கு, நெல்லிக்காய் மற்றும் கற்றாழையை காலையில் எடுத்துக்கொள்ளலாம்.
இதனை ஜூஸ்-ஆகவும் குடித்து வரலாம். இது ஆக்சிஜனேற்ற பண்பினை கொண்டது எனவே நரை முடிக்கும், பொடுகு பிரச்சனைக்கும் நல்லது நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
மேலும் நெல்லிக்காய் உண்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.
வேர்க்கடலை
இதில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் உள்ளது. எனவே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். இரவில் வேர்க்கடலையை ஊற வைத்த காலையில் சாப்பிடலாம்.
இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
அதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மேலும் வேர்க்கடலை சாப்பிடுவதால் , வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்யை வராமல் தடுக்கிறது.
வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் அதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வைட்டமின்கள் மன அழுத்தம் , பதட்டம் மற்றும் அல்சைமர் நோய் ஆகியவற்றின் குறைப்புக்கு இது தொடர்புடையதாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |