முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் கறிவேப்பிலை சாதம் - எளிய முறையில் செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.
அதில் பலருக்கு ஞாபகத்திற்கு வருவது கறிவேப்பிலை. அந்தவகையில் கறிவேப்பிலை வைத்து எப்படி அருமையான சுவையில் கறிவேப்பிலை சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை பொடி செய்ய
- கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- சீரகம் - 1 மேசைக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 10
- எள் - 1 மேசைக்கரண்டி புளி
- கறிவேப்பிலை - 2 கப்
- பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
- கல் உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சாதம் செய்ய
- நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 3
- கறிவேப்பிலை
- வறுத்த வேர்க்கடலை - 1 கப்
- சாதம் - 1 கிண்ணம்
- அரைத்த கறிவேப்பிலை பொடி - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
1. முதலில் கறிவேப்பிலை பொடி செய்ய, கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும்.
2. அதன் பிறகு சிவப்பு மிளகாய், எள் மற்றும் புளி சேர்க்கவும்.
3. மிளகாய் வறுத்த பின் கறிவேப்பிலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காய தூள், கல்லுப்பு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பொடி செய்து தனியாக வைக்கவும்.
4. இப்போது சாதத்திற்கு ஒரு அகன்ற கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கவும்.
5. அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.
6. இவை அனைத்தும் நன்கு சிவந்ததும், வடித்த சாதம், பொடித்த கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கவனமாகக் கலக்கவும்.
7. தேவையான அளவு பொடி சேர்த்த பிறகு, உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும் இறுதியாக சுவைக்காக சிறிது நெய் சேர்த்து கலக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |