இது தெரிந்தால் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்ற மாட்டீர்கள்!
பொதுவாகவே வெளி இடங்களில் விற்கப்படுகின்ற அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி சருமத்தை பொலிவுப்பெற செய்கின்றோம்.
இதே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி இலகுவான முறையில் சருமத்தை பாதுகாக்கலாம் எனவும் அறிந்திருப்போம். ஆனால் அனைவரது வீட்டிலும் பொதுவாக கிடைக்ககூடிய ஒரு பொருளான அரிசி வைத்து முகத்தை எப்படி அலகுவான முறையில் பராமரிக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
அரிசி கழுவிய தண்ணீரை சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு பயன்படுத்துவது என்பது 1000 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரிய முறையாகும். இது தற்போது சமூகத்தினரால் ட்ரென்ட் ஆகி வருகின்றது. இதை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீர், சோறு வடித்து எடுக்கப்பட்ட சூடான கஞ்சி என இரண்டுமே சருமம் மற்றும் முடி பராமரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சருமத்திற்கு முடிக்கும் எப்படி முக்கியபங்கு வகிக்கின்றது என்று தெரியுமா?
சரும நிறத்தை அதிகரிக்க
அரிசி கழுவிய நீரை வடித்து 2 மணி நேரம் வைத்திருந்தால் தண்ணீர் மேலாக வடிந்திருக்கும். அதை ஒரு போத்தலில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரில் இருக்கும் சத்துகள் சருமத்தின் மூன்று அடுக்குகளில் சென்று சருமத்தை சுத்தம் செய்து, ருமத்தை தளர செய்யாமல் அதை இறுக்கமாக வைத்திருக்கும். இதையடுத்து சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
முடி வளர்சியை அதிகரிக்க
அரிசி நீரை ஊறவைத்து குறைந்தது 7 மணி நேரமாவது ஊற வையுங்கள். தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்திய பின்பு இந்த நீரை தலை முழுவதும் தடவி 10 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும். . கூந்தலுக்கு போஷாக்கும், பொலிவும் கிடைக்கும். முடி உதிர்வு, நுனி வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகளும் வராமல் தவிர்க்கலாம்.
இந்த அரிசி தண்ணீரில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக,
- அமினோ அமிலங்கள்
-
பி வைட்டமின்கள்
-
வைட்டமின் ஈ
-
கனிமங்கள்
- ஆக்ஸிஜனேற்றிகள்
ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |