தினமும் தலை வாரும் போது அதிக முடி கொட்டுதா? அலட்சியமா இருந்திடாதீங்க
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.
அதிலும் ஒரு சிலருக்கு முடி கொட்டுதல் அதிகமாகவே இருக்கும். அதற்கு என்ன தான் செய்தாலும், முடி கொட்டுதல் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கவில்லை என்றாலும் முடி உதிர்தல் ஏற்படும். இதுவும் ஒரு அறிகுறியாக தான் கட்டாயம் இருக்கும்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பொதுவாகன காரணமாக இருப்பது சீப்பு. இது பற்றி எப்போதாவது யோசித்து பார்த்து இருக்கீங்களா?
ஆம். உண்மை தான். அனைவரும் பயன்படுத்தும் சீப்பினால் கூட முடி கொட்டுதல் ஏற்படும். அது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- நீளமான அடர்த்தியான முடியைக் கொண்டவர்கள் வேரிலிருந்து சீப்பை அழுத்தி வாரக்கூடாது.
- பிளாஸ்டிக் சீப்புகளுக்கு பதிலாக மரத்தினால் செய்யப்பட்ட சீப்பினை பயன்படுத்தலாம்.
- மரச்சீப்பில் எண்ணெய் தடவி முடி வாரினால் நல்லது.
- ஆண்டிசிபேடிக் லோஷன் என்ற ஒரு திரவம் கடைகளில் கிடைக்கும். அதை வாரத்திற்கு ஒரு முறை சீப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இதனால் முடிக் கொட்டுதல் குறையும்.
மேலும் வீடு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் முடியை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.
பாதாம் எண்ணெய்
உச்சந்தலையில் சில துளிகள் வைத்து மெதுவாக மசாஜ் செய்யவும். இது முடி நார்களை ஊட்டமளிக்கும். மற்றும் சேதமடைந்த முடியை மீண்டும் ஆரோக்கியமாக வளர செய்யும்.
தேங்காய் எண்ணெய்
இதில் வைட்டமின் ஈ உள்ளது, இது முடி நார்களை வலுப்படுத்த முக்கியமானது. ஆகவே தினமும் முடிக்கு இதை பயன்படுத்தி வருவது நல்லது.
ஆலிவ் எண்ணெய்
தலைமுடியில் சில துளி தலைமுடியில் சில துளிகள் ஊற்றி, பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முடிக் கொட்டுதல் குறைவடையும்.
பச்சை தேயிலை தேநீர்
கிரீன் டீயில் சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை ஒரு கோப்பை அளவிற்கு தயார் செய்து, குளிர்விக்க வேண்டும். பின் முடியில் தடவி குளிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |