ஒரே வாரத்தில் முடி வளர்ச்சியை தூண்டும் கேரட் Hair Pack; எப்படி தயாரிக்கலாம்?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அதிக ஆசை இருக்கும்.
அதற்காக முடி முதல் கால் நகம் வரை அனைவரும் பராமரிப்புகளை மேற்கொள்வார்கள். அதிலும் தலைமுடியின் வளர்சியை தூண்டுவதில் பெண்களுக்கு அதீத் சந்தோஷம் இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சில ஆரோக்கிய குறைப்பாட்டின் காரணமாக முடி வளர்ச்சியானது முற்றிலும் குறைந்துவிடும்.
அதை நீக்கும் விதமாக நீங்கள் வீட்டில் இருக்கும் கேரட் வைத்து எப்படி முடியை ஒரே வாரத்தில் வளர செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முடி வளர்ச்சிக்கு உதவும் கேரட்
- முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- உச்சந்தலையில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
- பொடுகுத் தொல்லையைத் தடுக்கிறது.
- தலைமுடி நரைப்பதைத் தடுக்கிறது.
Hair Pack செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
1 கேரட்
2 தேக்கரண்டி தயிர்
1 வாழைப்பழம்
செய்முறை
முதலில் கேரட் மற்றும் வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதை தயிருடன் சேர்த்து, தலை முழுவதும் பூசி அரை மணிநேரத்திற்கு விட்டு பின் கழுவவும்.
தேவையான பொருட்கள்
1 கேரட்
ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி
1 வெங்காயம்
எலுமிச்சை சாறு
2 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி பதப்படுத்தவும்.
அடுத்து அந்த பேஸ்ட்டில் எலுமிச்சை சாறும் ஆலிவ் எண்ணெயும் சேர்க்கவும்.
அடுத்து தலை முடிக்கு தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு, பின்னர் கழுவவும்.
தேவையான பொருட்கள்
1 கேரட்
தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து பேஸ்ட் செய்யவும்.
அடுத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின்னர் இதை தலை முழுவதும் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |