அசுர வேகத்தில் முடி செழித்து வளர வேண்டுமா? இதோ பாட்டி சொன்ன சூப்பர் டிப்ஸ்
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் முடிக்கற்றைகள் இருக்கின்றதாம். அதில், தினசரி ஒவ்வொருவருக்கும் 100 முடிகள் வரை உதிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் முடி உதிர்தல் பிரச்சினை சாதாரணமாகிவிட்டது. சிலருக்கு முடி உதிர்வதை நினைத்து மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏன்னென்றால் முடி தான் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அழகை கொடுக்கிறது. முடி உதிர்ந்து சொட்டையானாலோ ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிரமமாகிவிடுகிறது.
கவலை வேண்டாம்... இயற்கை முறையில் தலைமுடியை எப்படி கிடுகிடுவென வளர வைக்க முடியும் என்று பார்ப்போம் -
தலைமுடி கிடுகிடுவென வளர வேண்டும் என்றால், கொதிக்கும் நீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கிவிடவேண்டும். அந்த நீரை மறுநாள் காலை தலையில் தேய்த்து கழுவி வந்தால் முடி வளர்ச்சி பெறும்.
கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி, அதை மறுநாள் காலையில் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.
கீழநெல்லி கீரையை சுத்தம் செய்து அதை தேய்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி செழித்து வளரும்.
உணவில் நெல்லிக்காய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல் குறையும்.
ஆலமரத்தின் வேர், செம்பருத்தி பூ இடித்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்தல் பிரச்சினை சரியாகும்.
நெல்லிக்காயை பவுடரை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருமையடையும்.
கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை அரைத்து தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி பெறும்.
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் போட்டு குளித்து வந்தால் தலைமுடி செழித்து வளரும்.
மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்றாக காய வைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி செழுமையாக வளரும்.