முடி உதிர்வால் சிரமமா? வீட்டிலேயே சீயக்காய் பொடி செய்திடலாம்
பொதுவாகவே பெண்கள் தனது அழகில் கூடிய கவனம் செலுத்துவார்கள். அதிலும் தனது சருமம் மற்றும் முடி என்றால் இன்னும் கூடிய கவனம் செலுத்துவார்கள்.
ஏனென்றால் அனைவரையும் கவரக்கூடிய ஒரு வசீகரமானது நீளமான மற்றும் அடர்த்தியான முடியில் தான் இருக்கின்றது.
இந்த முடி ஒரு சிலருக்கு பிறப்பில் இருந்து இருக்கும். ஒரு சிலர் வீட்டில் இருந்து முயற்சிகள் எடுத்து இயற்கையான முறையில் முடியை கவனித்துக்கொள்வார்கள்.
ஆனால் நினைத்தப்படி முடி அடர்த்தியாக வளர்ந்து விட்டால், உடனே செய்துக்கொண்டிருந்த தினசரி பராமரிப்பை நிறுத்திவிட்டு அக்கறை இல்லாம் இருப்பார்கள்.
ஆகவே முன்னோர்கள் கூறியப்படி எப்படி இலகுவான முறையில் சீயக்காய் வைத்து முடியை எப்படி வீட்டில் இருந்தே பராமரிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- சீயக்காய் – 1 கிலோ
- செம்பருத்திப்பூ- 3 கப்
- வெந்தயம் – 100 கிராம்
- பூலாங்கிழங்கு – 100 கிராம்
- எலுமிச்சை தோல் – 25
- பயத்தம் பருப்பு – 1/4 கிலோ
- காய்ந்த நெல்லி – 100 கிராம்
- கார்போக அரிசி – 100 கிராம்
- பூவந்திக் கொட்டை – 100 கிராம்
- செம்பருத்தி பூ, இலை – 50 கிராம்
- ஆவாரம்பூ – 100 கிராம்
- மரிக்கொழுந்து – 100 கிராம்
- கரிசலாங்கண்ணி இலை – 1 கப்
இந்த அனைத்து பொருட்களையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து நன்றாக காய வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸியில் சேர்த்து பவுடர் போன்று நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை தினமும் தலைக்கு குளிக்கும் வேளையில் முடிக்கு எண்ணெய் வைத்து 10 நிமிடம் கழித்து சீயக்காயை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்துர் 15 நிமிடங்கள் வரை தலையில் பூசி, வழமைப்போன்று குளித்தால், மிருதுவான முடி கிடைக்கும்.
ஆகவே இந்த முறையில் உங்களது முடிகளை பராமரித்துக்கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |