முடி உதிர்வை தடுக்க சிறந்த ஹேர் மாஸ்க்: எப்படி தயாரிப்பது?
இன்றய நாட்களில் முடி உதிர்வு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.
முடி உதிர்வைக் குறைக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.
இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் பொதுவான இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுபவை.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்
- தேன்
- ஆலிவ் எண்ணெய்
- முட்டை
செய்முறை
ஒரு வாழைப்பழத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் மென்மையான பேஸ்ட் ஆகும் வரை மசிக்கவும்.
மசித்த வாழைப்பழ விழுதுடன் 1-2 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவற்றில் 1-2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும், ஒரு முட்டையை உடைத்து ஊற்றியும் நன்றாக கலந்து கொள்ளவும்.
Stylecraze
இந்த ஹேர் மாஸ்க்கை உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை தாராளமாகப் பயன்படுத்துங்கள்.
30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் கழித்து, முடியை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
பிறகு, வழக்கம் போல் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்து கண்டிஷனிங் செய்யவும்.
கிடைக்கும் பலன்கள்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறது.
தேனில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் முடியை மென்மையாக்குகின்றன. தேனில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
OnlyMyHealth
ஆலிவ் எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கின்றன.
முட்டையில் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ, பயோட்டின், ஃபோலேட் மற்றும் புரதங்கள் உள்ளன. அவை ஈரப்பதத்தை நிரப்ப உதவுகின்றன மற்றும் முடி இழைகளை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |