உங்கள் முடி ரொம்ப வறண்டு இருக்குதா? இதனை எளியமுறையில் போக்க இதோ சில டிப்ஸ்
Hair Problem
Damaged hair
By Kishanthini
பொதுவாக இன்றைக்கு பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளுள் முடி வறட்சியும் ஒன்றாகும். பொடுகு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகிறது.
வறட்சியான முடி என்பதும் ஒரு முக்கியமான பிரச்சனையாகவே உள்ளது. முடி வறண்டு காணப்படும்போது அது பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களுக்கு உள்ளாகிறது.
எனவே முடி வறட்சியை நாம் கண்டிப்பாக சரி செய்தாக வேண்டும். இதற்கு ஒரு சில எளிய வழிகள் உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியின் வேர்களில் இருந்து முடியின் முனை வரை தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாக இருக்கும்.
- ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் இதில் உள்ள தயிர் மற்றும் தேன் முடியின் வறட்சியைப் போக்கும், எலுமிச்சை பிசுபிசுப்புத்தன்மையைக் குறைக்கும்.
-
ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை தலைமுடியில் நன்கு தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இதனால் விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும், முட்டையில் உள்ள புரோட்டின், தலைமுடியை வலிமையாக்கும்.
-
ஒரு பௌலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பால் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலைமுடியில் தடவி 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
-
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் வேர் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இதனால் முடி நன்கு மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US