எலி வால் போல் முடி இருக்கா? அடர்த்தியான கூந்தலுக்கு இரண்டே முறை இந்த ஹேர் பேக் யூஸ் பண்ணுங்க
இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும்.
முடி உதிர்தல், நரைமுடி, பொடுகு பிரச்சனை, வறண்ட முடி, சொட்டை விழுகுதல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் நிறுத்திவிடும்.
அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு இந்த ஹேர் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் போதுமானது. இதனை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 3 துண்டு
- வெங்காயம்- 1
- முருங்கை கீரை- 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை- 5
- செம்பருத்தி பூ- 4
- வெந்தயம்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெந்தயத்தை குறைந்தது 5 மணி நேரம் நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கற்றாழை, வெங்காயம், முருங்கை கீரை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை மற்றும் ஊறவைத்த வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Shutterstock
பின் தலையில் நன்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள ஹேர் பேக்கை உச்சந்தலை முழுக்க முடி முழுக்க நன்கு தேய்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு மணி நேரத்திற்கு பின் அன்றாட பயன்படுத்தும் ஷாம்ப்பூக்களை கொண்டு தலையை அலசிக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |