கருகருன்னு நீளமான கூந்தலுக்கு வாரம் 2 முறை இந்த ஹேர்பேக் யூஸ் பண்ணுங்க
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, இந்த ஹேர்பேக்கை தவறாமல் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை- 1 கைப்பிடி
- பச்சை பயிறு- 50g
- வெந்தயம்- 20g
- கருஞ்சீரகம்- 20g
- அரிசி ஊறிய தண்ணீர்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருவேப்பிலையை கழுவி மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
அடுத்து இதில் பச்சைப்பயிறு, வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து ஆறவைத்து கொள்ளவும்.
பின் இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து அந்த பவுடரை சேகரித்து அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
இந்த பவுடரை 2 டீஸ்பூன் எடுத்து அதில் அரிசி தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து தலைக்கு தேய்க்கவும்.
ஒரு 1 மணி நேரம் அப்படியே விட்டு பின் தலைக்கு குளிக்கலாம்.
வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும் கருக்காருன்னும் வளரும் . மேலும் முடி உதிர்வு, பொடுகு போன்றவை நிரந்தரமாக நீங்கும்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |