ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்தால் புற்றுநோய் அபாயம் 3 மடங்கு அதிகம்! பெண்களுக்கு எச்சரிக்கை தகவல்
முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்வதால் அரிதான வகை புற்றுநோயின் அபாயத்தை 3 மடங்கு அதிகரிக்க வழிவகுக்கும்.
அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வில் 378 பேர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
ரசாயணங்களை பயன்படுத்தி முடியை நேராக்குவதற்கான (Hair Straightening) கருவிகளை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் அரிதான வகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், அமெரிக்காவில் சுமார் 11 வருட காலப்பகுதியில் 35 முதல் 74 வயதுடைய கிட்டத்தட்ட 34,000 பெண்களிடமிருந்து தரவுகல் சேகரிக்கப்பட்டது.
முடி நேராக்க (straightening) பொருட்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயின் ஆபத்து கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் (NIEHS) ஆய்வின் தலைவர் அலெக்ஸாண்ட்ரா வைட் கூறுகையில், "ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களைப் பயன்படுத்தாத பெண்களில் 1.64 சதவீதம் பேர் 70 வயதிற்குள் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம், ஆனால் அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, அந்த ஆபத்து 4.05 சதவீதம் வரை அதிகரித்தது" என்றார்.
"கருப்பை புற்றுநோய் என்பது ஒப்பீட்டளவில் அரிதான வகை புற்றுநோய்" என்பதன் பின்னணியில் இந்த தகவலை வைப்பது முக்கியம் என்று அவர் மேலும் கூறினார்.
ஆய்வில் பதிவு செய்யப்பட்ட 33,947 பெண்களில், 378 பேர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
ஆராய்ச்சியாளர்கள் மற்ற ஆபத்து காரணிகளைக் கணக்கிட்டனர், இருப்பினும், ஒரு வருடத்திற்கு நான்கு முறைக்கு மேல் இரசாயன ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பொருட்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
முந்தைய ஆய்வுகள் இந்த ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் தயாரிப்புகளில் "எண்டோகிரைன் சீர்குலைக்கும்" இரசாயனங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன, அவை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அதிக ஆபத்துகளுடன் தொடர்புடையவை.