வறட்சியான கூந்தலை மென்மையாக மாற்ற இந்த ஒரே ஒரு Hairpack போதும்
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் பட்டு போன்ற மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
அந்தவகையில், வறட்சியான கூந்தலை மென்மையாக மாற்ற இந்த ஒரே ஒரு Hairpack போதும் இப்படி பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- கேரட்- 2
- வாழைப்பழம்- 1
- தயிர்- 3 ஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கேரட்டை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
இறுதியாக அதில், தயிர் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும்.
பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும்.
இந்த ஹேர்பேக்கை வாரம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த கேரட் மாஸ்க், முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். மேலும், உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும்.
மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |