மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்! பாரிஸ் வெல்லும்..PSG வீரர் உருக்கம்
கிலேர்மோன்ட் அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்த நிலையில், பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் வீரர் ஹக்கிமி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டிராவில் முடிந்த போட்டி
பிரான்சின் Stade Gabriel Montpied மைதானத்தில் நடந்த பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் கிலேர்மோன்ட் அணிகளுக்கு இடையிலான லிகு1 போட்டி டிராவில் முடிந்தது.
Icon Sport
ஆனால் இந்தப் போட்டியில் PSG அணியின் கையே ஓங்கி இருந்தது. கிலேர்மோன்ட் 12 ஷாட்ஸ், 3 ஆன் டார்கெட் அடித்த நிலையில் PSG அணி 21 ஷாட்ஸ் மற்றும் 10 ஆன் டார்கெட் அடித்தது.
இந்த நிலையில், PSG-யின் நட்சத்திர வீரரான ஹக்கிமி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
PSG
ஹக்கிமியின் பதிவு
அவரது பதிவில், 'கிலேர்மோன்ட்-யில் நேற்று மீண்டும் வருகை தந்த எங்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. முடிவு ஏமாற்றம், ஆனால் இன்னும் உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு, பார்க் டெஸ் பிரின்சஸில் நடந்த கிளாசிக் போட்டியில் நாங்கள் அனைவரும் வெற்றியைக் கொண்டாடினோம். போட்டிக்கு பிறகு, நம்மை நாமே மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறோம்.
நமது செயல்கள் மற்றும் நமது வார்த்தைகள் பொதுமக்களிடம், குறிப்பாக கால்பந்து போட்டியை காண வேண்டும் என்று கனவு காணும் இளையவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் நன்கு அறிவோம்.
நாங்கள் சொல்லக் கூடாத வார்த்தைகளுக்கு மனதார வருந்துகிறோம் மற்றும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறோம். எதிர்காலத்தில் முன்னுதாரணமாக அமைவதற்கான நமது கடமையை மேலும் மதிக்க எல்லாவற்றையும் செய்வோம். புதன் அன்று நியூகேஸில் உங்களில் பலரை நாங்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம். பாரிஸ் வெல்லும்!' என கூறியுள்ளார்.
Merci à tous nos supporters d’avoir été présents hier encore à Clermont. Déçus du résultat mais fiers de pouvoir toujours compter sur vous.
— Achraf Hakimi (@AchrafHakimi) October 1, 2023
Il y a une semaine nous fêtions tous ensemble au Parc des Princes notre belle victoire dans le Classique.
Après le match, nous nous sommes… pic.twitter.com/en7dBLL7n2
AFP
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |