ஒரு எழுத்தால் வந்த சிக்கல் - மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்த இந்திய அரசின் நிறுவனம்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான HAL சைபர் மோசடியில் ரூ.55 லட்சத்தை இழந்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL), இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் ஜெட் விமானங்களை முடிக்க தேவையான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.
இதேபோல், 2024 ஆம் ஆண்டு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான PS Engineering Inc உடன் 3 விமானத்தின் பாகங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.
இந்த பேச்சுவார்த்தையானது அதன் பின்னர் மின்னஞ்சல் வாயிலாக நடைபெற்றுள்ளது.
இதில், PS Engineering Inc போல போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றில் இருந்து HALக்கு விமான பாகங்களுக்கான தொகையை செலுத்த கோரி மின்னஞ்சல் வந்துள்ளது.
ரூ.55 லட்சம் மோசடி
உண்மையான நிறுவனத்தின் மின்னஞ்சல்தான் என நினைத்த HAL அதிகாரிகள், அவர்கள் சொன்ன கணக்கிற்கு $63,000 (இந்திய மதிப்பில் ரூ.55 லட்சம்) அனுப்பியுள்ளனர்.
உண்மையான விற்பனையாளர்கள் இன்னும் பணம் வரவில்லை என மின்னஞ்சல் அனுப்பிய போது, இந்த மோசடி தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக HAL கான்பூர் கிளையின் கூடுதல் பொது மேலாளர் அசோக் குமார் சிங் மார்ச் 13 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், “gledbetter@ps-engineering.com” என்ற மின்னஞ்சல் மூலம் PS Engineering Inc நிறுவனம் உரையாடியுள்ளது.
இதனை கண்காணித்துள்ள மோசடியாளர்கள், அதில் e என்ற ஒரு எழுத்தை மட்டும் நீக்கி விட்டு, jlane@ps-enginering.com என்ற மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி HAL அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர். ,மோசடியில் ஈடுபட்டது இந்தியவை சேர்ந்தவர்களை அல்லது அமெரிக்காவை சேர்ந்தவர்களா என விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |