Haldirams ரூ.42,579 கோடிக்கு விற்பனை? விரட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய இனிப்பு மற்றும் கார வகை உணவு தயாரிப்பாளர்களில் ஹல்டிராம்ஸ்(Haldirams) நிறுவனம் முதன்மையான இடத்தில் உள்ளது.
வலைவீசும் பெரு நிறுவனங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய இனிப்பு மற்றும் கார வகை உணவு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹல்டிராம், உலகின் மிகப்பெரிய தனியார் ஈக்விட்டி (PE) நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்களின் ரூ.42,579 கோடி மதிப்பிலான முதலீட்டை விரைவில் ஈர்க்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
லைவ் மிண்ட் செய்தி அறிக்கையின்படி, Blackstone Inc நிறுவனம், Temasek Holdings Ltd மற்றும் Bain Capital Lp ஆகிய மூன்று தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் ஹல்டிராம் ஃபுட்ஸ் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்டில் கட்டுப்பாட்டு பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளன.
இந்த அறிக்கையின்படி, இந்த மூன்று பெரிய தனியார் ஈக்விட்டி நிறுவனங்களும் ரூ.66,797 கோடி முதல் ரூ.83,490 கோடி மதிப்பில் குறைந்தது 51% பங்குகளை வாங்க முயற்சித்து வருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடைபெற்றால், இந்தியாவின் நுகர்வோர் பிரிவில் இதுவரை நடந்த மிகப்பெரிய தனியார் ஈக்விட்டி ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
ஆர்வம் காட்டிய டாடா குழுமம்
சில மாதங்களுக்கு முன்னர், டாடா குழுமமும் ஹல்டிராமில் கட்டுப்பாட்டு பங்குகளை வாங்க ஆர்வமாக இருந்தது நினைவுகூரத்தக்கது.
ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, அந்த நேரத்தில் ஹல்டிராம் தனது மதிப்பை ரூ.83,126 கோடி என நிர்ணயித்துக் கொண்டது. இதன் காரணமாக, ஹல்டிராமின் கட்டுப்பாட்டைப் பெற டாடா குழுமம் ரூ.42,394 கோடி என்ற தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அவர்கள் அதற்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஹல்டிராம் ஃபுட்ஸ் இண்டர்நேஷனல்
நாக்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஹல்டிராம் ஃபுட்ஸ் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2022 நிதியாண்டில் ரூ.3,622 கோடி வருவாயையும், அதன் சகோதர நிறுவனமான ஹல்டிராம் ஸ்நாக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.5,248 கோடி வருவாயையும் ஈட்டியுள்ளது.
1937 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஹல்டிராம், அதன் மொறுமொறுப்பான bhujia என்ற சிற்றுண்டி வகைகள் மிகவும் பிரபலமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |