பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விருப்பம்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியவேண்டும் என வாக்களித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய, பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விருப்பம்
Best for Britain என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானிய அரசின் தற்போதைய அணுகுமுறை அல்லது உறவுக்கு, 61 சதவிகித பிரித்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் திரும்பவேண்டும் என 53 சதவிகித பிரித்தானியர்கள் தெரிவித்துள்ள நிலையில், லேபர் வாக்காளர்களில் 83 சதவிகிதம் பேரும், லிபரல் டெமாக்ரட் கட்சி ஆதரவாளர்களில் 84 சதவிகிதம் பேரும், கிரீன்ஸ் கட்சியினரில் 82 சதவிகிதம் பேரும் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் திரும்பவேண்டும் என்று கூறியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |