ஜேர்மனியில் பாதுகாப்பு குறைவாக உணரும் பாதி பொதுமக்கள்
ஜேர்மனியில் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பு குறைவாக உணருவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற Deutschlandtrend கருத்துக்கணிப்பின் படி, இருவரில் ஒருவர் தற்போது பொது இடங்களில் பாதுகாப்பாக இல்லை எனக் கூறுகின்றனர்.
இது 2015-ல் இருந்ததைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் அஞ்சுவது திருட்டு மற்றும் வாய்மொழி தாக்குதல்களுக்காகவே ஆகும்.
இந்த பாதுகாப்பு குறை உணர்வுக்கு, புலம்பெயர்வு மற்றும் நகர்ப்புற சூழல் குறித்த அரசியல் விவாதங்களும் காரணமாக இருக்கலாம்.

அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள், பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் வீட்டுக்குள் தான் நடைபெறுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது.
2024-ஆம் ஆண்டு மட்டும் 2.65 லட்சம் குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்.
மேலும், மக்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் மிகுந்த அதிருப்தியுடன் உள்ளனர்.
புதிய அரசாங்கமான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி, மக்களிடையே பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. 79 சதவீதம் பேர் அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வர முடியாது எனக் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜேர்மனியின் வெளிநாட்டு நிலைமை, பொருளாதார நிலை மற்றும் சமூக நிலைத்தன்மை குறித்த நம்பிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் மிகுந்த வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை தரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து மக்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany public safety survey 2025, Deutschlandtrend insecurity report, Germans feel unsafe in cities, urban safety concerns Germany, Friedrich Merz migration comments, Germany crime perception 2025, German public transport safety, domestic violence stats Germany, Germany political dissatisfaction, CDU SPD coalition approval rating