உக்ரைன் உதவி தொடர்பில் ஜேர்மன் மக்களிடையே குறைந்துவரும் ஆர்வம்: ஆய்வு முடிவுகள்
Almost half of people in Germany want Ukraine aid cut or dropped: ஜேர்மானியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்தவேண்டும் அல்லது குறைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
ஜேர்மன் தலைவர்கள், உக்ரைனுக்கு தங்கள் ஆதரவு தொடர்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், உக்ரைன் உதவி தொடர்பில் ஜேர்மன் மக்களிடையே ஆர்வம் குறைந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வு முடிவுகள்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுமார் 49 சதவிகிதம் ஜேர்மன் மக்கள், உக்ரைனுக்கு நிதி, ராணுவ மற்றும் மனிதநேய உதவிகள் செய்வதை நிறுத்தவேண்டும் அல்லது குறைக்கவேண்டும் என தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

விளக்கமாகக் கூறினால், 25 சதவிகித ஜேர்மன் மக்கள், உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
24 சதவிகித மக்கள், உக்ரைனுக்கு ஜேர்மனி செய்துவரும் உதவிகள் குறைக்கப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
30 சதவிகித ஜேர்மானியர்கள், இப்போது வழங்கும் அளவிலேயே ஜேர்மனி உக்ரைனுக்கு உதவிகள் வழங்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
வெறும் 9 சதவிகித ஜேர்மன் மக்கள் மட்டுமே உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
Welt am Sonntag என்னும் ஊடகம் சார்பில் YouGov ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.