ஹாலோவீன் பார்ட்டியில் நடந்த கத்திக்குத்து: மூன்றாவது சிறுவனை கைது செய்த பொலிஸார்
Hampshire halloween party stabbing 3rd teen arrested: ஹாலோவின் கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாலோவீன் பார்ட்டியில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயரில் Chandlers Ford பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில் 5 சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர்.
வெளியான தகவலின் படி, கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் அனுமதி இல்லாமல் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த தாக்குதலில் 16 வயதை சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் 17 வயதை சேர்ந்த 2 சிறுவர்கள் என 5 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
தற்போது இவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

காயமடைந்த 17 வயது சிறுவன் ஒருவன் மட்டும் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மூன்றாவது சிறுவன் கைது
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மூன்றாவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாம்ப்ஷயர் ஹாலோவீன் பார்ட்டியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.