ஹமாஸ் தாக்குதல்... உங்கள் ஆதரவு யாருக்கு? ஜேர்மனியில் இஸ்லாமிய அமைப்புகள் சந்திக்கும் பிரச்சினைகள்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல், சில நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களை அழுத்தத்துக்குள்ளாக்கியுள்ளது போலுள்ளது.
குறிப்பாக, ஜேர்மனியில் வாழும் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு என்ன? அவர்களுடைய ஆதரவு யாருக்கு என வெளிப்படையாக அறிவிக்கும், ஒரு அழுத்தத்தை உருவாக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஜேர்மன் அமைச்சரின் கருத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினை
ஜேர்மன் உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரான Cem Özdemir, எக்ஸில் வெளியிட்ட ஒரு செய்தியில், இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதம் குறித்து ஜேர்மனியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பெரும் மௌனம் சாதிக்கின்றன, பயங்கரவாதம், கொலைகள் மற்றும் கடத்தல்களை எதிர்கொள்ளும் நேரத்தில், இஸ்லாமிய அமைப்புகளுடன் இடைபடும்போது அப்பாவித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Stefan Trappe/IMAGO 
அதைத் தொடர்ந்து சில இஸ்லாமிய அமைப்புகள் இஸ்ரேலிய மக்களுக்கு தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளன.
சில அமைப்புகள், நேரடியாக இஸ்ரேல் தாக்குதலை விமர்சிக்காவிட்டாலும், இருதரப்பும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளன.
அமைச்சர் மீதே விமர்சனம்
இதற்கிடையில், இஸ்லாமிய அமைப்பொன்றின் நிறுவனரான Eren Güvercin என்பவர், ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு, ஜேர்மன் உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரான Cem Özdemir இப்படி பேசக்கூடாது.

Image: Mesut Zeyrek/AA/picture alliance 
 இது வெட்கக்கேடு, நீங்கள் ஜேர்மனியிலுள்ள இஸ்லாமியர்களுக்காக பேசவில்லை, உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 
ஆக, மொத்தத்தில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதல், சில நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்காவது அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதையே ஜேர்மனியில் நிகழும் வாதங்கள் காட்டுகின்றன எனலாம்.