ஹமாஸ் உறுப்பினர்கள் மீது ஜேர்மனியில் தொடங்கிய விசாரணை
ஐரோப்பாவில் யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஹமாஸ் உறுப்பினர்கள் மீது பெர்லினில் விசாரணை தொடங்கியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது
ஜேர்மனியில் ஹமாஸ் படைகளின் உறுப்பினர்களுக்கு எதிரான முதல் நீதிமன்ற வழக்கு விசாரணை இதுவென்று சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். ஹமாஸ் உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாக்குதல்களைத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
மட்டுமின்றி, ஜேர்மனியில் முதன்முறையாக, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் உறுப்பினர்களாக பங்கேற்றதாக சந்தேக நபர்கள் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
மேலும், சாத்தியமான தாக்குதல்களுக்காக போலந்தில் ஒரு இரகசிய ஆயுதக் கிடங்கைக் கண்டுபிடிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அத்துடன் லெபனானில் உள்ள கஸ்ஸாம் படைப்பிரிவின் துணைத் தளபதியிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |