ஜேர்மன் நகரமொன்றில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
ஜேர்மன் நகரமொன்றில், ட்ராம்கள் மற்றும் பேருந்துகளில் ஆயுதங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களைக் கொண்டு செல்லத் தடை
ஜேர்மன் நகரமான ஹாம்பர்கில், ட்ராம்கள் மற்றும் பேருந்துகளில் ஆயுதங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் அரசு, மாகாணங்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து ஹாம்பர்க் நகரம் இந்த முடிவை எடுத்துள்ளது.
பொதுப்போக்குவரத்தில் ஆயுதங்கள் தடை குறித்து விளக்கிய நகர செனேட்டரான Andy Grote, தற்போது பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது.
ஆகவே, மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்.
இப்படி ஜேர்மனியில் பொதுப்போக்குவரத்தில் ஆயுதங்களை தடை செய்யும் முதல் மாகாணம் ஹாம்பர்க் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |