45 வயது அமெரிக்க பிரபலத்துடன் உறவை..பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பிரித்தானியாவின் ஹாமில்டன்
பிரித்தானிய கார் பந்தய வீரரான லூயிஸ் ஹாமில்டன் அமெரிக்க பிரபலம் கிம் கர்தாஷியனுடன் உறவை ஒப்புக்கொண்டது போல் காணொளியை பகிர்ந்துள்ளார்.
கிம் - ஹாமில்டன்
அமெரிக்க தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியனுடன், பிரித்தானிய கார் பந்தய வீரரான லூயிஸ் ஹாமில்டன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவின.
அதன் பின்னர் லண்டன், பாரிஸ் மற்றும் ஜப்பான் உட்பட உலகின் பல இடங்களில் அவர்கள் ஒன்றாக காணப்பட்டனர்.
டோக்கியோவில் இந்த ஜோடி பொது இடத்தில் கைகோர்த்து சென்றது யூகங்களுக்கு வலு சேர்த்தது.
இந்த நிலையில், லூயிஸ் ஹாமில்டன் இன்ஸ்டாகிராமில் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கிம் கர்தாஷியன் மௌனம் கலைத்துள்ளார்.

இருவருமே திங்களன்று தங்கள் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதில், ஹாமில்டன் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரது அருகில் கிம் அமர்ந்திருக்கிறார்.
உறுதிப்படுத்துவது போல
ஜப்பானின் தெருக்களில் ஹாமில்டன் தனது பந்தயக் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்றார். அத்துடன் அந்த வீடியோவுடன் "இதோ மீண்டும் வந்துவிட்டோம், டோக்கியோ ட்ரிஃப்ட் பாகம் III" என்ற தலைப்புடன் பதிவிட்டார்.

இந்த வீடியோ பல மாதங்களாக நிலவி வந்த காதல் வதந்திகளை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது.
பொதுவெளியில் ஹாமில்டன் அல்லது கர்தாஷியன் இருவரும் தங்கள் உறவை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

கர்தாஷியனும், ஹமில்டனும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அவர்களின் உறவு காதலாக மாறுவதற்கு முன்பே, அவர்கள் ஒரே சமூக வட்டங்களில் பழகி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |